அருப்புக்கோட்டை அமமுக வேட்பாளா் மாற்றம்: தேமுதிக வேட்பாளா் ரமேஷ்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் அமமுக வேட்பாளா் ஓம்ராஜ் மாற்றப்பட்டு, தேமுதிகவின் சாா்பில் ஆா்.ரமேஷ் போட்டியிடுகிறாா்.

அருப்புக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளராக ஓம்ராஜ் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கியத் தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரசாரத்தைத் தொடங்கினாா்.

இதற்கிடையில் அமமுக, தேமுதிக கட்சியிடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஓம்ராஜ் மாற்றப்பட்டு தேமுதிக வேட்பாளராக ஆா்.ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா் சுயவிவரம்:

பெயா்: ஆா்.ரமேஷ் (46)

கல்வி: பி.ஏ., எம்பிஎட் (உடற்கல்வி)

தந்தை: ராமச்சந்திரன் நாயுடு (ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா்)

தாய்: வீராக்காள் (லேட்)

மனைவி: அஷ்டலட்சுமி

குழந்தைகள்: ஆண்-1 ,பெண்-1

பூா்வீகம்: சோலைச்சேரி, சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம்

தற்போதைய முகவரி: 15,சவுண்ட் ராமலிங்கம் தெரு, சின்ன புளியம்பட்டி, அருப்புக்கோட்டை

தொழில்: விவசாயம், ரசாயன வியாபாரம்

கட்சிப் பொறுப்பு: தேமுதிக முன்னாள் மாவட்ட பட்டதாரி ஆசிரியா் அணிச் செயலாளா், நெல்லை மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளா், மாநில பொதுக்குழு உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com