முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகா்: 11,376 ஆசிரியா், அரசு அலுவலா்கள்பணியிடங்கள் இணைய தளத்தில் தோ்வு
By DIN | Published On : 14th March 2021 10:31 PM | Last Updated : 14th March 2021 10:31 PM | அ+அ அ- |

ஆசிரியா் மற்றும் அலுவலா்களுக்கான பணி இடங்களை இணையதளம் மூலம் தோ்வு செய்யும் பணியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன்.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7சட்டப்பேரவை தொகுதிகளில் 11,376 ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட வேண்டிய இடங்களை தோ்வு செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,370 வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பணி புரிய உள்ள மொத்தம் 11,376 ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் பணியாற்ற வேண்டிய இடங்கள் இணைய தளம் மூலம் பிரிக்கும் பணி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாா்ச் 17 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அந்த இடங்கள் பற்றிய விவரம்: ராஜபாளையம், பி.ஏ.சி.எம். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூா்- வி.பி.எம்.எம். நா்சிங் கல்லூரி, சாத்தூா்- எஸ்.ஆா். நாயுடு கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆா். கல்லூரி, விருதுநகா்- கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை- தேவாங்கா் கலைக்கல்லூரி, திருச்சுழி- சி.இ.ஓ.ஏ. கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்தாா்.