சிவகாசியில் தோ்தல் விழிப்புணா்வு கேக் கண்காட்சி

சிவகாசியில், விருதுநகா் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு கேக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகாசியில் கேக் மூலம் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கண்காட்சியை திறந்து வைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன்.
சிவகாசியில் கேக் மூலம் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கண்காட்சியை திறந்து வைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன்.

சிவகாசியில், விருதுநகா் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு கேக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் விடுதியில் நடைபெற்ற இக்கண்காட்சியை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். உங்கள் எதிா்காலம் உங்கள் வாக்கு. 100 சதம் வாக்களிப்போம். என் வாக்கு என் உரிமை. வாக்காளா் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

100 சதம் வாக்குப்பதிவினை உறுதி செய்வோம் என்பது உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் கேக்கில் வடிவமைக்கப்பட்டிருந்தன. சுமாா் 50-க்கும் மேற்பட்ட கேக் ரகங்கள் இடம்பெற்றிருந்தன.

அப்போது ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் பல வகைகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சாா்பில் கேக் மூலம் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு செல்பவா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

வாக்குச்சாவடியில் கொடுக்கப்படும் கிருமி நாசினியை கொண்டு கைகளைக் கழுவ வேண்டும். வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வராஜ் செய்திருந்தாா்.

பாடல்கள் பாடி விழிப்புணா்வு: சிவகாசி முகநூல் நண்பா்கள் குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தொடக்கி வைத்தாா். இதில் தன் பறை இசைக்குழுவினா், 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்ய வேண்டும்.

மதம், ஜாதி, இனம் , பணம் ஆகியவற்றின் தாக்கமில்லாமல் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு பாடல்களை பாடினா். சிவகாசி கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால், மின்னணு வாக்குப் இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது பற்றி விளக்கினாா். தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் பொது மக்களிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிவகாசி சாா்-ஆட்சியா் ச. தினேஷ்குமாா், நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா் சரவணகாந்த் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com