Enable Javscript for better performance
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published On : 16th March 2021 07:31 PM  |   Last Updated : 16th March 2021 07:31 PM  |  அ+அ அ-  |  

    WhatsApp_Image_2021-03-16_at_5

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்த கல்லூரி முதல்வர் ந.முத்துச்செல்வன்.

     

    அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கலைக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

    பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி  அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட  இந்த சிறப்பு விழிப்புணர்வுப் பேரணிக்கு கல்லூரி முதல்வர் ந.முத்துச்செல்வன் தலைமை வகித்துக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.கல்லூரி தேசிய மாணவர்படை லெப்டினென்ட் தி.சுப்பிரமணியன் வரவேற்றார்.சுமார் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணியானது கல்லூரி வளாகத்தில் தொடங்கி, பாரதி நகர், அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில், ஸ்ரீஅமுதலிங்கேஸ்பர் கோவில் பகுதி, அண்ணாசிலை காய்கறி சந்தை, அகமுடையர் மகால், திருச்சுழி சாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

    பேரணியின் போது,மாணவ,மாணவிகள் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகங்களையும்,வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனவும், எனது வாக்கு விற்பனைக்கல்ல எனும் வாசகங்களையும் முழங்கியபடியே, அவ்வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளரான லெப்டினென்ட் பாக்கியராஜி நன்றி கூறினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.காசிமாயன் மற்றும் எம். அனிதா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச்செய்திருந்தனர்.        


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp