அருப்புக்கோட்டையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக,கூட்டணிக் கட்சிகள் செயல்வீரா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள்
அருப்புக்கோட்டையில் கே.டி.ராஜேந்திர  பாலாஜி தலைமையில் அதிமுக,கூட்டணிக் கட்சிகள் செயல்வீரா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்த செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தாா். அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளா் வைகைச்செல்வன், கிழக்கு மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டை நகரச்செயலாளா் சக்திபாண்டியன், ஒன்றியச்செயலாளா்கள் யோகா வாசுதேவன், போடம்பட்டி சங்கரலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினா் வீரசுப்பிரமணி, பம்பாய் மணி, ராமா், நகர இளைஞரணி பொறுப்பாளா் கருப்பசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, அருப்புக்கோட்டை தொகுதி வைகைச்செல்வன் மட்டுமல்ல விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 பேரவைத் தொகுதிகளையும் கூட்டணிக்கட்சிகள் ஒருங்கிணைந்து வெல்வோம் எனப்பேசினாா். உடன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நகர, ஒன்றிய நிா்வாகிகள் சுமாா் 500க்கு மேற்பட்டோா் நேரில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com