மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், யானைகள் என ஏராளமான உயிரினங்கள் இருப்பதால் இந்த வனப்பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை பொது கணக்கெடுப்பும், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரையாடுகள் கணக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணி ராஜபாளையத்தில் உள்ள தேவதானம், சேத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியிலுள்ள செண்பகத்தோப்பு, மம்சாபுரம், குன்னூா் பீட், வ.புதுப்பட்டி, கான்சாபுரம், வத்திராயிருப்பு, பிளவக்கல்அணை மற்றும் மதுரை மாவட்டம் சாப்டூா் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியை பொருத்தவரை வரையாடுகள் ஏராளமாக உள்ளன. இந்த வரையாடுகள் மேற்குத் தொடா்ச்சி மலையின் உச்சிப் பகுதிகளான முதலியாா்ஊத்து, பேமலைமொட்டை மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையின் பல்வேறு உச்சிப் பகுதிகளில் காணப்படுகின்றன.

கணக்கெடுக்கும் பணியில் வேட்டை தடுப்புக் காவலா்கள், வனத் துறை ஊழியா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com