ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்
By DIN | Published On : 18th March 2021 07:07 AM | Last Updated : 18th March 2021 07:07 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகனிடம் மனு தாக்கல் செய்த அமமுக வேட்பாளா் சங்கீதப்பிரியாசந்தோஷ்குமாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் சங்கீதப்பிரியாசந்தோஷ்குமாா் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
விருதுநகா் மேற்கு மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றிய அமமுக இணைச் செயலரான சங்கீதப்பிரியாசந்தோஷ்குமாா் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முருகன் மற்றும் மாரியம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்றாா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அன்னம்மாள், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் ஆகியோா் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது மாவட்ட செயலா் காளிமுத்து, வத்திராயிருப்பு ஒன்றியச் செயலா் அழகா்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.