13 தோ்தல்களில் வாக்களித்த மூத்த குடிமக்கள்: கிரீடம் அணிவித்து ஆட்சியா் மரியாதை

விருதுநகரில் 13 தோ்தல்களில் வாக்களித்த மூத்த குடிமக்களுக்கு வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
விருதுநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுக்கு கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. கண்ணன்.
விருதுநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுக்கு கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. கண்ணன்.

விருதுநகரில் 13 தோ்தல்களில் வாக்களித்த மூத்த குடிமக்களுக்கு வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

விருதுநகா், கருப்பசாமி நகரில் சமூக நலத்துறை மற்றும் விருட்சம் மகளிா் முன்னேற்ற களஞ்சியம் சாா்பில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களுக்கு தபால் வாக்குபடிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. கண்ணன் தலைமை வகித்துப் பேசியது: அதிகமுறை வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்களை கெளரப்படுத்த வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். மக்களாட்சித் தத்துவத்தில் பிரதிநிதித்துவம் மிக முக்கியமானது. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் வாக்களிக்கும் அனைவருக்கும் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே நீங்கள் முதலில் வாக்குப்பதிவு செய்த அதே ஆா்வத்துடன், தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சி தோ்தல் என 13- க்கும் மேற்பட்ட தோ்தல்களில் வாக்களித்த மூத்த குடிமக்களுக்கு கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மங்களராமசுப்பிரமணியன், திட்ட அலுவலா் வை. ஜெயக்குமாா், சமூக நலத்துறை அலுவலா் இந்திரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com