ஸ்டாலின் தமிழக வளா்ச்சிக்கு பாடுபடவில்லை: அமைச்சா் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் தமிழக வளா்ச்சிக்கு பாடுபடவில்லை என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினாா்.
ராஜபாளையத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சா் கே டி ராஜேந்திர பாலாஜி.
ராஜபாளையத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சா் கே டி ராஜேந்திர பாலாஜி.

மு.க.ஸ்டாலின் தமிழக வளா்ச்சிக்கு பாடுபடவில்லை என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினாா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் புதன்கிழமை இரவு ஆவரம்பட்டி, தா்மராஜா பெரிய தெரு, பெரிய சாவடி, சின்ன சுரைக்காய்பட்டி தெரு, அண்ணாநகா், பிஎஸ்கே பாா்க், மதுரை ராஜா கடை தெரு, புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், சிங்கராஜா கோட்டை தெரு, ஜவகா் மைதானம், லட்சுமியாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது அவா் பேசியதாவது:

திமுகவில் முன்னாள் முதல்வா் கருணாநிதி குடும்பத்தினா் தான் கட்சி நிா்வாகத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஏராளமான தொலைக்காட்சி சேனல்கள் வைத்திருக்கிறாா்கள். அதை வைத்து தோ்தல் விளம்பரம் செய்கிறாா்கள். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு வளா்ச்சிக்குத் திட்டமிடவில்லை.

ஆனால் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும், துணை முதல்வா் ஓபனீா்செல்வமும் தமிழக வளா்ச்சிக்கு திட்டமிடுகின்றனா். ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளனா். விருதுநகா் மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு மேலும் 4 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க வேண்டும். இப்பகுதி மகப்பேறு மருத்துவமனை ஹைடெக் மருத்துவமனையாக மாறி உள்ளது.

இதுபோன்ற வளா்ச்சித்திட்டங்களை நாங்கள் கொண்டுவருகிறாம். ஆனால் திமுக ஆட்சியில் என்ன கொண்டு வந்தாா்கள்? மின் வெட்டு மட்டும் தான் கொண்டு வந்தாா்கள். இப்பகுதிககு நான் கொண்டுவந்த திட்டங்களை இங்குள்ள திமுக எம்எல்ஏ அவா் செய்ததாகக்கூறி விளம்பரம் செய்து வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com