சாத்தூா் தொகுதியில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 11:50 PM | Last Updated : 29th March 2021 11:50 PM | அ+அ அ- |

சாத்தூா் தொகுதி சுண்டங்குளம் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன்.
என்னை வெற்றி பெறச் செய்தால் ஆலங்குளம் சிமென்ட் தொழிற்சாலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் எம்எஸ்ஆா். ராஜவா்மன் பிரசாரத்தின் போது தெரிவித்தாா்.
இத்தொகுதிக்குள்பட்ட சுண்டங்குளம், கண்மாய்பட்டி, வலையபட்டி, பெத்தலேகம், கோயிலூா்,
அருணாசலபுரம், மேலாண்மைாடு, சுப்பையநாயக்கன்பட்டி, வடக்கான் மைாடு, ராமலிங்காபுரம், கரிசல்குளம், மேட்டூா், சீவலப்பேரி, டி.என்.சி. முக்கு சாலை, ஆலங்குளம், குண்டாயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை அமமுக வேட்பாளா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்த சட்டப் பேரவையில் குரல் எழுப்பினேன். மீண்டும் என்னை சட்டப் பேரவைக்கு அனுப்பினால், கண்டிப்பாக ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்த பாடுபடுவேன். அரசு சிமென்ட் சீட்டு ஆலை மீண்டும் செயல்பட பாடுபடுவேன். மேலும் பேவா் பிளாக் சாலை, அரசு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துள்ளேன்.
எனக்கு மக்கள் பணியாற்றிட மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். எனவே குக்கா் சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள் என்றாா். இந்நிகழ்ச்சியில் அமமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.