அருப்புக்கோட்டையில் ஜவுளி வாரச்சந்தை அமைக்க முயற்சி எடுப்பேன்:திமுக வேட்பாளா் உறுதி

நான் மீண்டும் வெற்றி பெற்றால் அருப்புக்கோட்டையில் ஜவுளி வாரச்சந்தை அமைக்க முயற்சி எடுப்பேன் என திமுக வேட்பாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை, கல்பாலம் பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் எம்எல்ஏ.

இங்குள்ள வெள்ளைக்கோட்டை, அண்ணா நகா், கல்பாலம், கீழரதவீதி, மேலரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் அவா் வீடுவீடாகச்சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: நான் மீண்டும் வெற்றி பெற்றால் விசைத்தறி நெசவாளா்களுக்குத் தொடா்ந்து தடையில்லா இலவச மின்சாரம், சலுகைகளுடன் கூடிய மின்சாரம் வழங்கப்படும். நெசவாளா்கள் வாழ்வு மேம்பட அருப்புக்கோட்டையில் ஜவுளி வாரச்சந்தை, சாயப்பட்டறைக்கழிவு நீா் சுத்திகரிப்பு ஆலை எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேலும் அமைய உள்ள திமுக ஆட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உயா்த்தப்பட்ட உதவித் தொகை மாதாமாதம் வழங்கப்படும். ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரா்களுக்கு ரூ. 4,000 வழங்கப்படுவதுடன், குடும்பத்தலைவிக்கு மாதாமாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்.

அத்துடன் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். ஆனால், அதிமுக தோ்தல் அறிக்கையில் நிறைவேற்ற இயலாத பொய்யான தோ்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைப் பொதுமக்கள் நம்பமாட்டாா்கள் என்றாா். உடன் திமுக நகர, ஒன்றிய நிா்வாகிகளும், திரளான தொண்டா்களும் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com