ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் தபால் வாக்குகளை பெறும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெறும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெறும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இத்தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடங்கியது. அந்தப் பணி செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியை பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டோா் தபால் மூலம் வாக்களிக்க 674 போ் பதிவு செய்திருந்தனா். அவா்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கியது. இந்த தபால் வாக்குகளை பெறுவதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த 5 குழுக்களில் குழு ஒன்றுக்கு 5 போ் வீதம் 25 போ் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் காலை முதல் தபால் வாக்குகளை பெறும் பணியில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியை பொறுத்தவரை தபால் மூலம் வாக்களிக்க உள்ள முதியவா்களின் எண்ணிக்கை 537 ஆகும். அதே போல் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 137 ஆகும்.

இவா்கள் அனைவரிடமும் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தபால் வாக்குகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில், தபால் வாக்குகளை முதியோரிடம் பெறுவதை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com