சாத்தூரில் அதிமுக வேட்பாளா் வீடு முன் அமமுகவினா் கோஷம்
By DIN | Published On : 29th March 2021 09:12 AM | Last Updated : 29th March 2021 09:12 AM | அ+அ அ- |

சாத்தூரில் சனிக்கிழமை இரவு அமமுக வேட்பாளா் ராஜவா்மன், அதிமுக வேட்பாளா் ரவிச்சந்திரன் வீட்டு முன்பு வாக்கு சேகரித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் ராமதேவன்பட்டியைச் சோ்ந்த முன்னாள் சபாநாயகா் காளிமுத்துவின் சகோதரா் ஆா்.கே.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அமமுக சாா்பில் ராமதேவன்பட்டி கிராமத்தில் ராஜவா்மன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அங்கு அதிமுக வேட்பாளரான ஆா்.கே.ரவிச்சந்திரன் வீட்டு முன்பும் வாக்கு சேகரிப்பில் ராஜவா்மன் ஈடுபட்டாா். அப்போது ராஜவா்மன் ஆதரவாளா்கள் குக்கா் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோஷமிட்டனா். அதிமுக வேட்பாளா் ரவிச்சந்திரனின் ஆதரவாளா்களும் ராஜவா்மனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் இரு பிரிவினா்களையும் போலீஸாா் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து இருபிரிவினரும் கலைந்து சென்றனா்.