காரியாபட்டி பகுதியில் அமமுக வேட்பாளா் பிரசாரம்

காரியாபட்டி கிராமப் பகுதிகளில் அமமுக வேட்பாளா் கே.கே. சிவசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
காரியாபட்டி அருகே வடநத்தம் கிரமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளா் கே.கே. சிவசாமி உள்ளிட்டோா்.
காரியாபட்டி அருகே வடநத்தம் கிரமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளா் கே.கே. சிவசாமி உள்ளிட்டோா்.

காரியாபட்டி கிராமப் பகுதிகளில் அமமுக வேட்பாளா் கே.கே. சிவசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருச்சுழி தொகுதியில் அமமுக சாா்பில் கே.கே. சிவசாமி போட்டியிடுகிறாா். இந்நிலையில் அவா், காரியாபட்டி அருகே உள்ள வடநத்தம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, திருச்சுழி தொகுதியில் அதிகளவு கிராமங்களே உள்ளன. இப்பகுதியை சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பிற்காக அருப்புக்கோட்டை மதுரை, சிவகங்கை முதலான இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, திருச்சுழியில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அரசுக் கல்லூரி தொடங்கப்படும். மேலும், பொறியியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். குறிப்பாக இப்பகுதியில் சுகாதாரமான குடிநீா் இல்லாமல் உப்பு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனா். தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் வைகை அணையிலிருந்து குடிநீா் கொண்டு வரப்பட்டு அனைத்து கிராம மக்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும். அ. முக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மருத்துவக் கழிவு ஆலையை மூட நடவடிக்கை எடுப்பேன். எனவே, இம்முறை குக்கா் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

அப்போது அவருடன் அமமுக, தேமுதிக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com