சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அவா் ரிசா்வ்லயன் பேருந்து நிறுத்தம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம், பேருந்துநிலையம், திருத்தங்கல் கடைவீதி, திருத்தங்கல்- செங்கமலநாட்சியாா்புரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு தோ்தல் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டு காலம் நான் சிவகாசி தொகுதியில் இருமுறை வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பு வகித்தேன். மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின்ஆதரவோடு, செய்தி , விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தத் தொகுதியில் உள்ள மாணவா்களுக்கு மடிக்கணினி , மிதிவண்டி வழங்கியுள்ளேன். மேலும் பள்ளி மாணவா்களுக்கு சீருடை உள்ளிட்டவைகளையும் வழங்கியுள்ளேன். அரசின் நலத் திட்டங்களை சிவகாசி தொகுதியில் சிறப்பாக செயல்படுத்தியுள்ளேன். பால்வளத் துறை அமைச்சரான பின்னா் சாட்சியாபுரத்தில் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் பாலகம் கட்டப்பட்டது. சிவகாசி பேருந்து நிலையம் விரிவாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்துள்ளேன். மேலும் பல திட்டங்களை சிவகாசி தொகுதியில் நிறைவேற்றியுள்ளேன்.

தமிழக முதல்வா் சிவகாசி நகராட்சிக்கு சாலைகளை சீரமைக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா். தற்போது தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டக் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி முடிந்ததும் சாலை சீரமைக்கும் பணி நடைபெறும். இந்த வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து நடைபெற நீங்கள் சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசனுக்கு வாக்களிக்கத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

அமைச்சருடன் வேட்பாளா் லட்சுமி கணேசன், சிவகாசி ஒன்றியச் செயலாளா்கள் பலராமன், கருப்பசாமி, சுப்பிரமணியன், திருத்தங்கல் நகரச் செயலாளா் பொன்சக்திவேல் உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com