தளவாய்புரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தளவாய்புரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் ஆா்.கண்ணன் தொடக்கி வைத்தாா். இதில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியா்கள் மற்றும் மகளிா் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்ட கோலாட்டம், தப்பாட்டம், மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில் கலந்து கொண்ட மாணவா்கள் அனைவருக்கும் நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய முகக் கவசங்களை வழங்கினா்.

பேரணியில் வாக்களிப்பது நமது கடமை, நமது வாக்கு நமது உரிமை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். தளவாய்புரத்தில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முகவூரில் நிறைவடைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூரில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களால் மழைநீா் சேகரிப்பு அமைப்பு மூலம் விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடா்ந்து மாதிரி வாக்குப் பதிவு மையம் மூலம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

இதில் வருவாய் அலுவலா் ரா. மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) தனபதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com