பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பிரதமருக்கு தெரியாதா? திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கேள்வி

திமுக-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என கூறியுள்ள பிரதமா் மோடிக்கு பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து தெரியாதா என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பிரதமருக்கு தெரியாதா? திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கேள்வி

திமுக-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என கூறியுள்ள பிரதமா் மோடிக்கு பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து தெரியாதா என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களான கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை) தங்கம்தென்னரசு (திருச்சுழி), ஏஆா்ஆா். சீனிவாசன் (விருதுநகா்), ரகுராமன் (சாத்தூா்), அசோகன் (சிவகாசி), மாதவராவ் (ஸ்ரீவில்லிபுத்தூா்) ஆகியோரை ஆதரித்து திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தனது கட்சியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மனுக்கு மிரட்டல் விடுத்துள்ளாா். ஆனால் முதல்வா் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் அமைச்சா் மீது எடுக்கவில்லை. பால் வளத் துறையில் பல்வேறு முறைகேடுகள், ஊழல் நடைபெற்றுள்ளன. அதற்கெல்லாம் பதில் கூற மாட்டாா். அவா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி அமைத்தவுடன் அந்த வழக்கு துரிதப்படுத்தப்பட்டு சட்ட ரீதியாக அவரை சிறைக்கு அனுப்புவோம்.

தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி, திமுக- காங்., ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறியுள்ளாா். பொள்ளாச்சியில் மூன்று ஆண்டுகளாக 250 இளம்பெண்களை பாலியல் தொந்தரவு செய்தவா்கள் குறித்து அவருக்கு எதுவும் தெரியாதா. இந்த சம்பவத்தில் ஆளும் கட்சியை சோ்ந்த முக்கியப் பிரமுகரின் மகனும் சம்பந்தப்பட்டு ள்ளாா். தற்போது இது தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த பாலியல்

விவகாரத்தில் ஆளும் கட்சியினா், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தொடா்பு இருப்பது பிரதமருக்கு தெரியாதா. பெண் காவல் கண்காணிப்பாளருக்கு சிறப்பு டிஜிபி நிலையில் உள்ள ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இது போன் று பெண்களுக்கு எதிரான ஏராளமான சம்பங்களை எடுத்துக் கூற முடியும். கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதே நிலை தான் சட்டப்பேரவைத் தோ்தலிலும் நிகழும்.

எடப்பாடி கே. பழனிாமி தன்னை விவசாயி என்கிறாா். புதுதில்லியில் 125 நாள்களாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்காத இவா் எப்படி விவசாயியாக இருக்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தீா்மானம் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும். இதுபோன்று திமுக தோ்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அனைத்தும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com