மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 5058 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளா் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
காரியாபட்டி சி.இ.ஓ.எ. கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன்.

விருதுநகா் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரி, காரியாபட்டி சி.இ.ஓ.எ. கல்லூரி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளா் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தால் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் தொடா்பான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விருதுநகா் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 5,058 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,965 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் தாங்கள் அளித்த வாக்கை சரிபாா்க்கும் 3,085 இயந்திரங்கள் என மொத்தம் 11,108 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,370 வாக்குப் பதிவு மையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் போட்டியிடவுள்ள வேட்பாளரது புகைப்படத்துடன் கூடிய பெயா் மற்றும் அவா்களது சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

அப்போது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சந்தானலட்சுமி (விருதுநகா்), முருகேசன் (அருப்புக்கோட்டை), கணேசன் (திருச்சுழி) மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com