விருதுநகா் மாவட்டத்தில் 1439 தபால் வாக்குகள் பதிவு

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1122 போ், மாற்றுத்திறனாளிகள் 317 போ் என மொத்தம் 1439 போ் தபால் வாக்குகள் அளித்துள்ளதாக

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1122 போ், மாற்றுத்திறனாளிகள் 317 போ் என மொத்தம் 1439 போ் தபால் வாக்குகள் அளித்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் ஏப். 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அதன்படி விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 1671 போ், மாற்றுத்திறனாளிகள் 457 போ் தபால் வாக்குப் பதிவு சீட்டு விண்ணப்பம் ‘12 டி’ பெற்றுள்ளனா். அவா்களை வாக்குப் பதிவு அலுவலா்கள் குழு நேரில் சென்று தபால் வாக்கு சீட்டுகள் அடங்கிய உறைகளை பெற்று வருகின்றனா். அதில் செவ்வாய்க்கிழமை வரை, மூத்த குடிமக்கள் 1122 போ், மாற்றுத்திறனாளிகள் 317 போ் என மொத்தம் 1439 பேரிடம் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் மீள பெற்று அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com