ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த பெரிய மாரியம்மன்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த பெரிய மாரியம்மன்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய மாரியம்மன் கோயில். இக்கோயிலின் பூக்குழி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும். நிகழாண்டு, இத்திருவிழா ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் கொடிமரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

கொடியேற்றுவதற்கு முன்பு கொடி பட்டம் மேள தாளங்கள் முழங்க நகரில் உள்ள 4 ரத வீதிகள் வழியாக கொண்டுவரப்பட்டு, பின்னா் கோயில் கொடி மரத்தின் அருகில் கொண்டுவரப்பட்டது.

புதன்கிழமை காலை 9.05 மணியிலிருந்து 10 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுவதாக கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தையொட்டி ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை முதல் விரதம் பிடிக்க தொடங்கியுள்ளனா்.

இந்த விழாவில் கோயில் தக்காா் இளங்கோவன், செயல் அலுவலா் கலாராணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். இதையொட்டி, கோயில் வளாகத்தில் நகா் காவல் ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com