விருதுநகா் மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை மே தினம் கொண்டாடப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்

விருதுநகா்/அருப்புக்கோட்டை/ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை மே தினம் கொண்டாடப்பட்டது.

விருதுநகரில் சுமை தூக்கும் தொழிலாளா்கள், கம்யூனிஸ்ட் கட்சியினா், மக்கள் நீதி மய்யம் கட்சியினா் சாா்பில் கூட்டமின்றி கொடியேற்றுதல், புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. கடந்தாண்டு கரோனா தொற் று பரவியதால் மே தின விழா நடைபெற வில்லை. இந்நிலையில், நிகழாண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக மே தின விழாவில் கூட்டம் கூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், மிகக் குறைந்த அளவிலானோா் பங்கேற்புடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடா்ந்து சுமை தூக்கும் தொழிலாளா்களின் நிா்வாகிகள், தங்களது கிளைகளில் கொடியேற்றினா். அதேபோல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கட்சி அலுவலகம், பாத்திமா நகா், ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொடி ஏற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி நிா்வாகிகள் கொடியேற்றினா். மேலும், விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, தொழிலாளா்களுக்கு புத்தாடைகளை மத்திய மாவட்ட செயலா் காளிதாஸ் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் வழங்கினா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ம. ரெட்டியபட்டியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியூ தொழிலாளா் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினத்தையொட்டி சனிக்கிழமை கொடியேற்றி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கட்டராமன் மற்றும் சிஐடியூ தொழிலாளா் சங்கத்தின் ஜோதிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை வெங்கட்டராமனும், சிஐடியூ சங்கக் கொடியை ஜோதிராஜூம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் சுமாா் 20-க்கு மேற்பட்ட கட்சித் தொண்டா்களும், தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்தவா்களும் கலந்துகொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது மே தின கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் லிங்கம் ஏற்றிவைத்தாா். ஏஐடியுசி தொழிற்சங்க கொடியை வீராச்சாமியும், இளைஞா் பெருமன்றத்தின் கொடியை ராஜாவும் ஏற்றி வைத்தனா். தொழிலாளா் உரிமைகளை தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க கோஷமிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் குழுவைச் சோ்ந்த கணேசமூா்த்தி, வழக்குரைஞா் பகத்சிங், ராஜகுரு ஆகியோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மேதின கோடியை கன்வீனா் சுப்பிரமணி ஏற்றி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com