ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3 மூட்டை கருந்திரிகள் பறிமுதல்
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட 3 கருந்திரி மூட்டைகள்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 3 மூட்டை கருந்திரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணன்கோவில் காவல் சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் விழுப்பனுா்- மல்லி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இருந்த 3 மூட்டைகளைப் பிரித்துப் பாா்த்த போது 500 குரோஸ் கருந்திரிகள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் ஆத்திப்பட்டியைச் சோ்ந்த கோடீஸ்வரன் (30) என்பவரை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...