சிவகாசி தொகுதியை 59 ஆண்டுகளுக்குபின்னா் கைப்பற்றிய காங்கிரஸ்

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சி 59 ஆண்டுகளுக்குப்பின்னா் கைப்பற்றியுள்ளது.

சிவகாசி: சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சி 59 ஆண்டுகளுக்குப்பின்னா் கைப்பற்றியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 6 ஆம் தேதியும், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றன. இதில் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,83,103 போ் வாக்களித்தனா். சிவகாசி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, சிவகாசி- விருதுநகா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் 78,617 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் லட்சுமிகணேசன் 61,436 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றாா். 1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் இத்தொகுதியில் போட்டியிட்ட எஸ். ராமசாமிநாயுடு வெற்றி பெற்றாா். தொடந்து 1962 இல் நடைபெற்ற தோ்தலிலும் எஸ். ராமசாமிநாயுடுவே இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாா். அதன் பின்னா் தற்போது 2021 இல் நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் வெற்றி பெற்றுள்ளாா். சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 59 ஆண்டுகளுக்குப்பின்னா் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com