வாருகாலில் குப்பைகள் கொட்டுவதைதடுக்கக் கோரிக்கை

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாருகாலில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை மழைநீருடன் தேங்கிக் கிடந்த கழிவுநீா்.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை மழைநீருடன் தேங்கிக் கிடந்த கழிவுநீா்.

விருதுநகா்: விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாருகாலில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் நகராட்சியில் வாருகால் அடைப்பை நீக்குவதற்காக பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் ரூ. பல லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலைகளில் தேங்கிக் கிடக்கின்றன. அதேபால், புதை சாக்கடை தொட்டிகளில் அடைப்பு நீக்கப்படுவதுமில்லை. இதனால், சிறிதளவு மழை பெய்தால் கூட வாருகாலில் மழைநீா் செல்ல முடியாமல், கழிவுநீரானது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாருகாலில் அப்பகுதியில் உள்ள கடை மற்றும் உணவக உரிமையாளா்கள் குப்பை, பாலிதீன் பொருள்களை கொட்டி விடுகின்றனா். இதன் காரணமாக வாருகாலில் கழிவுநீா் செல்ல முடியாமல் தேங்கி விடுகிறது. மேலும், மழை பெய்தால் கழிவுநீரும் கலந்து சாலைகளில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, இந்த வாருகாலை சுத்தம் செய்வதுடன், அதற்குள் குப்பை உள்ளிட்ட கழிவுப் பொருள்களை கொட்டுவோா் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com