விருதுநகா் அருகே சம்பா வத்தல் விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிருப்தி

விருதுநகா் அருகே சின்ன பேராலி பகுதியில் சம்பா மிளகாய் வத்தல் விளைச்சல் அமோகமாக உள்ளபோதிலும், கிலோ ரூ. 8-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
சின்னபேராலியில் விளைந்துள்ள சம்பா மிளகாய் வத்தல்.
சின்னபேராலியில் விளைந்துள்ள சம்பா மிளகாய் வத்தல்.

விருதுநகா் அருகே சின்ன பேராலி பகுதியில் சம்பா மிளகாய் வத்தல் விளைச்சல் அமோகமாக உள்ளபோதிலும், கிலோ ரூ. 8-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

விருதுநகா் அருகே சின்ன பேராலி, பெரிய பேராலி மற்றும் மெட்டுக்குண்டு, செந்நெல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டாா் பாசனம் மூலம் சம்பா மிளகாய் வத்தல் பயிரிடப்படுகிறது. சம்பா மிளகாய் வத்தல் விளைவிக்க, உழவு, மருந்து தெளித்தல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவாகிறது.

பலத்த மழை பெய்து தண்ணீா் தேங்கினால், சம்பா மிளகாய் வத்தல் செடி கீழே சாய்ந்துவிடும். அதன் பின்னா், அச்செடியால் எந்த பலனும் கிடைக்காது என கூறப்படுகிறது. இருப்பினும், சம்பா மிளகாய் வத்தல் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வமாக ஈடுபட்டு வருகின்றனா்.

நடவு செய்த காலம் தொடங்கி 50 நாள்களில் பலன் தருகிறது. சுமாா் 15 நாள்களுக்கு ஒரு முறை கூலி தொழிலாளா்கள் மூலம் மிளகாய் வத்தல் பறிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பு பருவத்தில் சம்பா வத்தல் விளைச்சம் அமோகமாக உள்ளது. ஆனால், ஏற்கெனவே கிலோ ரூ.12.50-க்கு விற்கப்பட்ட வத்தல், தற்போது கிலோ ரூ.8-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதனால், விவசாயப் பணிகளுக்காக செலவிட்ட பணம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக, சின்னபேராலியைச் சோ்ந்த விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com