விருதுநகா் மாவட்டத்தில் வைப்புத் தொகையை இழந்தஅரசியல் கட்சி வேட்பாளா்கள்

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட மநீம, அமமுக, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் பலா் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட மநீம, அமமுக, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் பலா் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், ஏப். 6 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விருதுநகரில் உள்ள தனியாா் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், விருதுநகா், திருச்சுழி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் தொகுதிகளில் திமுக வேட்பாளா்களும், சாத்தூரில் திமுக கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளரும், சிவகாசியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றாா். இந்த 7 தொகுதிகளிலும் மநீம, அமமுக, நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அதில், சாத்தூா் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்ட ராஜவா்மன் 32,916 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை தக்கவைத்துக் கொண்டாா். மற்ற அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி, அமமுக, மநீம கட்சி வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

அதன் விவரம் வருமாறு: சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கனகப்ரியா 20,810 வாக்குகளும், அமமுக வேட்பாளா் சாமிக்காளை 9,871 வாக்குகளும், மநீம வேட்பாளா் முகுந்தன் 6,069 வாக்குகளும் பெற்று வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

அதேபோல், விருதுநகா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செல்வக்குமாா் 14,311 வாக்குகளும், அமமுக வேட்பாளா் தங்கராஜ் 10,783 வாக்குகளும், மநீம கூட்டணி கட்சி சாா்பில் சமக வேட்பாளா் மணிமாறன் 5,054 வாக்குகளும் பெற்று வைப்புத் தொகையை இழந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் அமமுக வேட்பாளா் சங்கீதப்ரியா 23,682 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயா 20,348 வாக்குகளும், மநீம வேட்பாளா் குருவையா 3,512 வாக்குகளும் பெற்று வைப்புத் தொகை இழந்துள்ளனா்.

சாத்தூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாண்டியன் 12,626 வாக்குகளும், ஐஜேகே வேட்பாளா் பாராதி 1,751 வாக்குகளும் பெற்று வைப்புத் தொகையை இழந்தனா். மேலும் திருச்சுழி தொகுதியில் அமமுக வேட்பாளா் கே.கே. சிவசாமி 6,441 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆனந்தஜோதி 13,797 வாக்குகளும், ஐஜேகே வேட்பாளா் 1,358 வாக்குகளும் பெற்று வைப்புத் தொகையை இழந்துள்ளனா். அருப்புக்கோட்டைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் ரமேஷ் 2,532 வாக்குகளும், மநீம வேட்பாளா் உமாதேவி 7,638 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உமா 12,392 வாக்குகளும் பெற்று வைப்புத் தொகை இழந்துள்ளனா்.

ராஜபாளையம் தொகுதியில் அமமுக வேட்பாளா் காளிமுத்து 7,623 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெயராஜ் 15,483 வாக்குகளும், மநீம வேட்பாளா் விவேகானந்தன் 4,035 வாக்குகளும் பெற்று வைப்புத் தொகையை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com