ஸ்ரீவிலி. தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க தடுப்பு சுவா்

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில், முக்கிய சந்திப்புகளில் இரண்டு தடுப்பு சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் எல்ஐசி அலுவலகம் அருகே உள்ள சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி.

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் எல்ஐசி அலுவலகம் அருகே உள்ள சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக ராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, குற்றாலம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

எனவே, இச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் இரண்டு தடுப்பு சுவா் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com