‘ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில்மறுதோ்தலுக்கு வாய்ப்பில்லை’

ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் மறுதோ்தல் நடைபெற வாய்ப்பில்லை என தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் மறுதோ்தல் நடைபெற வாய்ப்பில்லை என தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.டபிள்யூ. மாதவராவும் (63), அதிமுக வேட்பாளராக இ.எம். மான்ராஜூம் களமிறங்கினா்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் கடந்த மாா்ச் 17 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில், இரண்டு நாள்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டாா். பின்னா் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இவருக்காக இவரது மகள் திவ்யாராவ் மற்றும் கூட்டணி கட்சியினா் தொடா்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டனா். ஏப்ரல் 6 ஆம் தேதி இத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனிடையே ஏப்ரல் 11 ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி மாதவராவ் உயிரிழந்தாா்.

ஆனாலும் இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை முடிவில் மறைந்த காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் வெற்றி பெறும் பட்சத்தில் அத்தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெறும் எனவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து, தோ்தல் நடத்தும் அலுவலா் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளா் இ.எம். மான்ராஜ் 70,475 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மறைந்த காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் 57,737 வாக்குகள் பெற்றுள்ளாா். எனவே ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்கு மறுதோ்தல் நடத்த வாய்ப்பில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com