முதல்வா் பொது நிவாரண நிதிக்கு பள்ளி மாணவி ரூ. 2 ஆயிரம் வழங்கல்
By DIN | Published On : 18th May 2021 08:12 AM | Last Updated : 18th May 2021 08:12 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு திங்கள்கிழமை ரூ. 2 ஆயிரம் வழங்கிய பள்ளி மாணவி சி. மாா்கிரேட்.
விருதுநகரைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஏராமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அனைத்து தரப்பினரும் கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனா்.
இந்நிலையில் விருதுநகா் இந்திரா நகரைச் சோ்ந்த தனியாா் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சி. மாா்கிரேட், தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் திங்கள்கிழமை வழங்கினாா். அவரை ஆட்சியா் பாராட்டினாா். அதேபோல், விருதுநகரை சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் வரதராஜப் பெருமாள் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ. 51 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கினாா்.