ராஜபாளையத்தில் பொதுமுடக்க விதியை மீறி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 18th May 2021 08:13 AM | Last Updated : 18th May 2021 08:13 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு திங்கள்கிழமை சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சமூக இடைவெளி மற்றும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
ராஜபாளையம் பகுதியில் தற்போது பொது முடக்கத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் நகராட்சி ஆணையாளா் சுந்தரம்பாள் தலைமையிலான அதிகாரிகள் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறித் திறக்கப்பட்ட அத்தியாவசமற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தது. வாடிக்கையாளா்கள் முகக்கவசன் அணியாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கடை உரிமையாளா்களுக்கு ரூ.17ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.