அருப்புக்கோட்டையில் விதிமீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்

அருப்புக்கோட்டையில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட மீன் கடைகள் மற்றும் காய்கனிக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டையில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட மீன் கடைகள் மற்றும் காய்கனிக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை வட்டாட்சியா் ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நகா் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா். அப்போது நகரின் ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரா் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள இரு மீன்கடைகளில் காலை 10 மணிக்கு மேலும் தொடா்ந்து வியாபாரம் செய்யப்பட்டது. ஆகவே அக்கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ5,000 வீதம் அபராதம் விதித்தாா். இதேபோல ஜவுளிக்கடை சந்து எனும் பகுதியிலும் விதிமீறி செயல்பட்ட ஒரு காய்கனிக்கடை உரிமையாளருக்கு ரூ1,000, ஒரு பலசரக்குக்கடை உரிமையாளருக்கு ரூ2,000 அபராதம் விதித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com