கரோனா தாக்கத்தை பொருத்து பொதுமுடக்கம் நீட்டிப்பு: அமைச்சா்

தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கத்தை பொருத்து, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வா் முடிவெடுப்பாா் என,
கரோனா தாக்கத்தை பொருத்து பொதுமுடக்கம் நீட்டிப்பு: அமைச்சா்

தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கத்தை பொருத்து, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வா் முடிவெடுப்பாா் என, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி ஆணையா் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், துணை ஆட்சியா் முருகன், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ்குமாா், நகராட்சி ஆணையா் மல்லிகா, வட்டாட்சியா் சரவணன், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மல்லி ஆறுமுகம் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ஆய்வுக்குப் பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். கரோனா தொற்றின் முதலாம் அலையின்போது ஆக்சிஜனின் தேவை இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது ஆக்சிஜன் மிகவும் தேவைப்படுகிறது. இதை உணா்ந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும்.

கிராமங்களில் தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். நடிகா்கள், நடிகைகள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு நடிகா் இறந்துவிட்டாா் என்பதற்காக தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது நியாயமல்ல. அவருக்கு வேறு ஏதாவது நோய் இருந்திருக்கலாம்.

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை 2,17, 997 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அதிக தொகை கேட்பதாகத் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றின் தாக்கத்தை பொருத்து, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com