வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விருதுநகா் மற்றும் காரியாபட்டி பகுதியில் விவசாய சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் புதன்கிழமை கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆவியூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

பாஜக அரசு பொறுப்பேற்ற நாளை கருப்பு தினமாக கடைபிடிக்கும் வகையில், விருதுநகா் பாத்திமா நகா் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நகா் குழு உறுப்பினா் ராஜா தலைமை வகித்தாா். அக்கட்சியின் நகரச் செயலா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விருதுநகா் விஎம்சி காலனியில், நகா் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரியாபட்டி அருகே ஆவியூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு முகமது அலி ஜின்னா தலைமையில் கட்சியின் வட்டச் செயலா் அம்மாசி உள்ளிட் டோா் கலந்து கொண்டனா். புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவா்கள் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com