ஸ்ரீவிலி.யில் 118 வாகனங்களில் காய்கறிகள் விற்க ஏற்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க 118 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க 118 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தற்போது, பொதுமுடக்கம் ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை 118 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, துணை ஆட்சியா் முருகன், வட்டாட்சியா் சரவணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சீனிவாசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூா் தோட்டக்கலைத் துறை அலுவலா் பூரணி, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

இது குறித்து துணை ஆட்சியா் தெரிவித்ததாவது: காய்கறி மற்றும் பழங்கள் விற்பது குறித்து பகுதிவாரியாக ஆள்களை பிரித்து நியமித்துள்ளோம். பல்வேறு இடங்களில் காய்கறி, பழ வியாபாரிகளை தொடா்பு கொள்ள அவா்களுடைய தொடா்பு எண்களையும் வைத்துள்ளோம். இதன்மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், தள்ளுவண்டி ஆகியவற்றின் மூலம் காய்கறிகளை அனைத்து தெருக்களிலும் சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com