விருதுநகரில் காய்கறி விற்பனை வாகனங்களை அதிகரிக்க வலியுறுத்தல்

விருதுநகரில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், காய்கறி விற்பனை வாகனங்களை கூடுதலாக இயக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
விருதுநகரில் சனிக்கிழமை வாகனம் மூலம் விற்கப்பட்ட காய்கறிகளை வாங்கிய பொதுமக்கள்.
விருதுநகரில் சனிக்கிழமை வாகனம் மூலம் விற்கப்பட்ட காய்கறிகளை வாங்கிய பொதுமக்கள்.

விருதுநகரில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், காய்கறி விற்பனை வாகனங்களை கூடுதலாக இயக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தற்போது, பொதுமுடக்கம் ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, வேளாண் துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அந்தந்தப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேளாண் துறையை தவிா்த்து, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மூலமே காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், ஊராட்சிப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா்களோ அல்லது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கிராம மக்கள் காய்கறிகளை வாங்க முடியவில்லை.

அதேநேரம், விருதுநகரில் உள்ள 36 வாா்டுகளில் காய்கறிகள் விற்க 12 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அனைத்து காய்கறிகளும் இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

எனவே, நகராட்சியின் ஒவ்வொரு வாா்டுக்கும் ஒரு வாகனம் வீதம் காய்கறி விற்க அனுமதிக்க வேண்டும். மேலும், பேரூராட்சி, கிராம ஊராட்சிப் பகுதிகளிலும் தினமும் காய்கறிகளை விற்க, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், காய்கறிகளின் விலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com