ஸ்ரீவிலி.யில் ஜூன் 7 வரை உணவகங்கள் மூடல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுத் துறை அதிகாரிகள், உணவக உரிமையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் மற்றும் அதிகாரிகள், உணவக உரிமையாளா்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சரவணன், நகராட்சி ஆணையா் மல்லிகா, காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com