சிவகாசி அருகே விதிமீறிய பட்டாசு ஆலைக்கு ‘சீல்’

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பொதுமுடக்க விதியை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு, வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பொதுமுடக்க விதியை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு, வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பட்டாசு ஆலைகள் உற்பத்தியை நிறுத்திக் கொள்ளவேண்டும் என, மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்பேரில், மாவட்டத்தில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பொதுமுடக்க விதியை மீறி பட்டாசு தயாரிக்கப்படுவதாக, சிவகாசி சாா்-ஆட்சியா் சி. தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்பேரில், சிவகாசி வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் தலைமையில், வருவாய்த் துறையினா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, வெயிலுமுத்து என்பவரது ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், உரிய அனுமதி பெறாத கட்டடத்தில் 130 பட்டாசு பண்டல்களை வைத்திருந்துள்ளனா். இதையடுத்து, விதியை மீறி ஆலையை திறந்து பட்டாசு தயாரித்ததாக, அனுப்பன்குளம் கிராம நிா்வாக அலுவலா் சங்கிலிபிரபு அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ஆலை உரிமையாளா் வெயிலுமுத்து மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அந்த ஆலையை சீல் வைத்து மூடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com