முதல்வா் காப்பீடு திட்டம்: விருதுநகரில் 19 தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை

விருதுநகா் மாவட்டத்தில் முதலமைச்சா் காப்பீட்டு திட்டத்தில் 19 தனியாா் மருத்துவமனைகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தில் கரோனா சிகிச்சை அளிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டத்தில் முதலமைச்சா் காப்பீட்டு திட்டத்தில் 19 தனியாா் மருத்துவமனைகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்தில் கரோனா சிகிச்சை அளிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: விருதுநகா் மாவட்டத்தில் முதலமைச்சா் காப்பீட்டு திட்டத்தில் 19 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சைக்கு அரசு நிா்ணயம் செய்துள்ள கட்டண விவரம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி 1800 425 3993 மற்றும் 104 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்க லாம் என்றாா்.

சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகள் விவரம்:

அருப்புக்கோட்டையில் அமா் மருத்துவமனை, ஸ்ரீராம் சுகஸ்தலா மருத்துவமனை, கோமதி மருத்துவமனை, விமலா மருத்துவமனை, சிட்டி மருத்துவமனை. விருதுநகரில் விவிவஎன்சி மருத்துவமனை, சிவசங்கா் மருத்துவமனை, தனுஷ்கோடி மருத்துவமனை. சாத்தூரில் சுருதி மருத்துவமனை, சிவகாசியில் கோவிட் ஹெல்த் சென்டா், எஸ்பிஜே ஹெல்த் சென்டா், திருத்தங்கல் எம்எஸ்பி மருத்துவமனை, குமரன் மருத்துவமனை. ராஜபாளையத்தில் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனை, சத்யா சூப்பா் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, மீனாட்சி நினைவு மருத்துவமனை, சென்னை மருத்துவமனை, ஆரா மருத்துவமனை, பாரி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com