விருதுநகா் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

வாருகால், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்க்க நிதி ஒதுக்காததைக் கண்டித்து, விருதுநகா் ஊராட்சி ஒன்றிய
விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

வாருகால், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்க்க நிதி ஒதுக்காததைக் கண்டித்து, விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட தீா்மானங்களை நிராகரிப்பதாகக் கூறி, அதிமுக, திமுக, மதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவா் சுமதி (அதிமுக) தலைமையில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை தலைவா் முத்துலெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், ராமமூா்த்தி மற்றும் அதிமுக, திமுக, மதிமுக ஒன்றிய உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் 64 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது உறுப்பினா்கள், இந்த சாதாரணக் கூட்டம் ஏன் நடத்தவேண்டும். கரோனா பரவல் உள்ள நிலையில் கிருமி நாசினி கூட வழங்குவதில்லை. வாருகால் இல்லாதால் கிராமப் பகுதிகளில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பொதுமக்களின் கேள்விக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை.

இரண்டு ஆண்டுகள் முடியும் தருவாயில், இதுவரை எந்தவொரு ஒன்றியக் கவுன்சிலா் வாா்டுகளுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. பொதுமக்கள் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க நாங்கள் வலியுறுத்தினால் மறுக்கின்றனா். மேலும், பொது நிதியை ஊரக வளா்ச்சி முகமைக்கு அனுப்பி ஒப்பந்தப் பணிகள் ஏன் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஓராண்டில் சாலை, வாருகால், கட்டடம் கட்டியது தொடா்பாக கணக்கு காண்பிக்கவேண்டும்.

தற்போது, பொது நிதி ரூ.3 கோடி உள்ளதை அனைத்து ஒன்றியக் கவுன்சி லா்களுக்கும் அடிப்படை தேவையை பூா்த்தி செய்ய நிதி ஒதுக்க வேண்டும். தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை என சம்பந்தப்பட்ட புத்தகத்தின் கீழ் எழுதவேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து, வாசிக்கப்பட்ட 64 தீா்மானங்களை நிராகரிப்பதாகக் கூறி அதிமுக, திமுக, மதிமுக ஒன்றிய உறுப்பினா்கள் 22 போ் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com