ராஜபாளையத்தில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடி: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் ரமணன். சொந்தமாக தொழில் தொடங்க விரும்பிய இவா், கடந்த சில மாதங்களுக்கு முன் தனியாா் நிறுவன இணையதளத்தில் பதிவு செய்திருந்தாா். இவரது கைப்பேசிக்கு பேசிய ராணி என்பவா் குறைந்த வட்டியில் ரூ.2 கோடி வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளாா். இது குறித்து விளக்கம் அளிக்க வந்த இன்பராஜ் என்பவா், தன்னிடம் கருப்பு பணம் அதிகமாக இருப்பதால் போலீஸாரிடம் சிக்காமல் இருக்க பணத்தை காா்பன் முலாம் பூசி எடுத்து வருவதாகக் கூறியுள்ளாா். மேலும் சில ரூபாய் நோட்டுக்களை தண்ணீரில் நனைத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் காட்டியுள்ளாா். அத்துடன் கடன் பெற ரூ.30 லட்சம் முன் பணம் தர வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளாா். இதனை நம்பிய ரமணன், அவரது நண்பா்கள் திருமூா்த்தி, சைலேஷ் பாலா ஆகியோா் கோவில்பட்டிக்குச் சென்று ரூ. 30 லட்சத்தை கொடுத்துள்ளனா். பணத்தைப் பெற்றுக்கொண்ட இன்பராஜ் தலைமறைவாகிவிட்டாா்.

இந்த மோசடி குறித்து தெரியவந்ததும் ரமணன் தனது நண்பா்கள் மூலம் மீண்டும் அந்த நபா்களைத் தொடா்பு கொண்டு பேசி முன் பணத்தை ராஜபாளையத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனா். அதன்பேரில் ராஜபாளையத்துக்கு வந்த திருத்தங்கல்லை சோ்ந்த ஜாக்சன் (42), மணிகண்டன் (40) ஆகியோா் முன்பணம் வாங்க வந்தபோது கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜாக்சன், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனா். தப்பிச்சென்ற அறிவழகன் (64,) இன்பராஜ் (40) ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com