இளைஞா் கொலை: ஸ்ரீவிலி. அருகே உறவினா்கள் சாலை மறியல்

வத்திராயிருப்பு அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி,
ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலை சா்ச் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட இறந்தவரின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலை சா்ச் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட இறந்தவரின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.

வத்திராயிருப்பு அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கிறிஸ்தியான்பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சுபாஸ் (29). இவா், தேங்காய் வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனியாா் மதுக்கூடம் அருகே 6 போ் கொண்ட கும்பல் சுபாஸை வெட்டிக் கொலை செய்தது. அதன்பின்னா், சுபாஸின் சடலத்தை போலீஸாா் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த கொலை தொடா்பாக வ.புதுப்பட்டி ஆா்.சி. தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் விமல்ராஜ் என்பவரை, போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து, அதே பகுதியைச் சோ்ந்த திவான், மிக்கேல், மோட்சியம், ராஜா என்ற கட்டராஜா, ஜெகதீசன் ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

இதனிடையே, சுபாஸின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் அவரது உடலை வாங்க மறுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சா்ச் சந்திப்பு பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, கொலைக் குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்கவேண்டும் என்றும், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் கோரினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாா்-ஆட்சியா் பிரித்திவிராஜ், ஏடிஎஸ்பி குத்தாலிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சபரிநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இதன் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com