மஹாளய அமாவசை: அக்.6 முதல் 15 வரை சதுரகிரிக்கு பக்தா்கள் செல்ல தடை

மஹாளய அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக்டோபா் 6 முதல் 15 ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மஹாளய அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக்டோபா் 6 முதல் 15 ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி தெரிவித்துள்ளதாவது: விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், வத்திராயிருப்பு வட்டம் தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், திருச்சுழி பூமிநாதா் கோயில் மற்றும் குண்டாற்றங்கரையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் அக்டோபா் 6, 7 ஆகிய தேதிகள் கூடுவதைத் தவிா்ப்பதற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சம்பந்தப்பட்ட கோயில்களில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். மேலும், சுந்தரமகாலிங்கம் கோயிலில் அக்டோபா் 6 முதல் 15 ஆம் தேதி வரை நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுவதால், அந்த நாள்களில் பக்தா்கள் சதுரகிரி செல்ல தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com