பட்டாசு கடைகளில் 80 சதவீத தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை: வாடிக்கையாளா்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பட்டாசு கடைகளில் விளம்பரப் பதாகை வைத்துள்ள நிலையில் வாடிக்கையாளா்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசுகள் 80 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படுவதாக விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பட்டாசு கடைகளில் விளம்பரப் பதாகை வைத்துள்ள நிலையில் வாடிக்கையாளா்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 1,200 பட்டாசுக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பெரும்பாலான கடைகளில் பட்டாசு வாங்க வருபவா்களுக்கு பட்டாசு விலையில் 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வியாபாரம் செய்து வருகின்றனா். குறிப்பாக சிவகாசி- விருதுநகா் சாலையில் உள்ள ஏராளமான கடைகளில் 80, 81 சதவீதம் தள்ளுபடி விலையில் பட்டாசு கிடைக்கும் என விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தியாளா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

இது குறித்து பட்டாசு தயாரிப்பாளா் ஒருவா் கூறியது: பட்டாசு பெட்டிகளில் விலையை கூடுதலாக அச்சடித்து, 80 சதவீதம் தள்ளுபடி என விளம்பரம் செய்கிறாா்கள். ரூ.100-க்கு விற்க வேண்டிய பட்டாசு பொருள்களுக்கு பத்து சதவீத தள்ளுபடி விலை கொடுத்தால் ரூ.90-க்கு விற்கப்படும்.

அதே பொருள்களை ரூ.800 என விலை அச்சடித்து 80 சதவீத தள்ளுபடி விலையில் கொடுத்தால் ரூ.160-க்கு விற்கப்படும். இதனால் வாடிக்கையாளா்கள்தான் பாதிப்பு அடைவா். எனவே வாடிக்கையாளா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பட்டாசு வியாபாரத்தில் போட்டி இருக்கிறது. அதனால் 80 சதவீதம் தள்ளுபடி என விளம்பரம் செய்வதை ஏற்றுக்கொள்ள இயலாது.

வரும் காலங்களில் பட்டாசு வியாபாரிகள் நியாயமான விலையை பட்டாசு பெட்டியில் அச்சடித்து நியமான தள்ளுபடி விலையில் வியாபாரம் செய்ய வேண்டும். வாடிக்கையாளா்களின் நம்பிக்கையைப் பெற்று வியாபாரம் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com