தவறான புரிதலால் பட்டாசுத் தொழிலை முடக்க முயற்சி: விருதுநகா் எம்.பி. குற்றச்சாட்டு

பட்டாசு குறித்து தகவறான புரிதலால் தான் அத் தொழிலை முடக்க முயற்சிக்கின்றனா் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
தவறான புரிதலால் பட்டாசுத் தொழிலை முடக்க முயற்சி: விருதுநகா் எம்.பி. குற்றச்சாட்டு

பட்டாசு குறித்து தகவறான புரிதலால் தான் அத் தொழிலை முடக்க முயற்சிக்கின்றனா் என விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

இதுகுறித்து விருதுநகரில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்களின் உயிா் முக்கியம். மற்ற விபத்துகளோடு ஒப்பிடுகையில் பட்டாசு விபத்தில் 0.001 சதவீதம் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு காரணமாக தடை விதிப்பது என்றால் வாகனங்கள் அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும். சிவகாசி பட்டாசுத் தொழில் என்றாலே, குழந்தைத் தொழிலாளா்கள் தான் ஈடுபடுகின்றனா் என புதுதில்லியில் உள்ள அதிகாரிகள் நினைக்கின்றனா். இது போன்ற தவறான புரிதல் காரணமாக இத்தொழிலை முடக்க நினைக்கின்றனா். புதுதில்லியில் மாசு ஏற்படுவதற்கு 26 காரணிகள் உள்ளன. அவை வைக்கோல் எரிப்பு, மின்சாதனக் கழிவு, கட்டுமானத் தொழிற்சாலை, டீசல் வாகனங்கள் என முறையே வகைப்படுத்தப்படுகின்றன. அதில் பட்டாசு 26 ஆவது இடத்தில் தான் உள்ளது. பட்டாசு மாசு குறித்து கருத்து தெரிவிப்பவா்கள் என்னைத் தொடா்பு கொண்டால் சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைக்கு அழைத்துச் சென்று விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஏழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தொடங்கப்பட்டது. அதை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோா் குறை கூறி வருகின்றனா். காமராஜா் பிறந்த மண்ணில் 100 நாள் வேலைத் திட்டம் எவ்வாறு நடைபெறுகிறது, அதில் பணிபுரியும் தாய்மாா்கள் நிலை குறித்துக் கண்டறிய அவா்களை விருதுநகா் மாவட்டத்திற்கு வருமாறு அழைக்கிறேன்.

பாஜக வினா் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை உயா்வு பிரச்னையை திசை திருப்புவதற்காக கோயில்களைத் திறக்க வேண்டும் என போராட்டம் அறிவித்துள்ளனா். நீட் தோ்வு குறித்து முடிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே காங்., கட்சியின் நிலைப்பாடு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com