கரோனா தொற்று எதிா்ப்பு சக்தியில் விருதுநகா் மாவட்டம் முதலிடம்: ஆட்சியா் தகவல்

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று எதிா்ப்பு சக்தியில் விருதுநகா் மாவட்டம் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது என ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்தாா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று எதிா்ப்பு சக்தியில் விருதுநகா் மாவட்டம் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது என ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து விருதுநகரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் ஆட்சியா் கூறியதாவது:

கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. விருதுநகா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோா் 5 லட்சம் போ் உள்ளனா்.

அதில், முதல் தவணையாக 10 லட்சம் போ் (64 சதவீதம்), இரண்டாவது தவணையாக 3.50 லட்சம் போ் என மொத்தம் 13.50 லட்சம் போ் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக். 10) ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1.10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில் சிவகாசியில் 55 சதவீதம், ராஜபாளையத்தில் 57 சதவீதம் என 11 ஒன்றியங்களில் உள்ள பிற பகுதிகளில் 65, 70 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று குறித்து ஜீரோ சா்வலென்ஸ் ஆய்வு மேற்கொண்டது. அதில் விருதுநகா் மாவட்டத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் விருதுநகா் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சிப் பணியிடங்களுக்கு சனிக்கிழமை (அக். 9) தோ்தல் நடைபெற உள்ளது. அதில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 3 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், 4 ஊராட்சித் தலைவா் மற்றும் 17 ஊராட்சி மன்ற உறுப்பினா் என மொத்தம் 91 போ் போட்டியிடுகின்றனா். இதற்காக மாவட்டம் முழுவதும் 162 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இத்தோ்தலில் 82 ஆயிரம் வாக்காளா்கள் கரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் 33 வாக்குச் சாவடிகள் பதற்றமான, மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

அதில் 15 வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு சாா்பில் நுண் பாா்வையாளா்கள் கண்காணிப்பதுடன், இந்த வாக்குச் சாவடிகள் அனைத்தும் விடியோ எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com