ஸ்ரீவிலி. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு புறப்பட்டது

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீநிவாசப் பெருமானுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சனிக்கிழமை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது
ஸ்ரீவிலி. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு புறப்பட்டது
ஸ்ரீவிலி. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு புறப்பட்டது

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீநிவாசப் பெருமானுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சனிக்கிழமை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில், ஆண்டாளுக்கு பிரம்மாண்டமான மாலை அணிவிக்கப்பட்டு அந்த மாலை திருப்பதியில் ஏழுமலையான் ஸ்ரீநிவாசப்பெருமான் அணிந்துகொள்ள கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்குரிய விழா சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்காக ஆண்டாளுக்கு பிரம்மாண்டமான மாலை பிரத்யேகமாக தயாா் செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை கூடை ஒன்றில் வைத்து திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் அனுமதிக்கப்படாத நிலையில், அா்ச்சகா்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் மட்டும் பங்கேற்றனா்.

முன்னதாக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கோயிலிலிருந்து மாடவீதி வழியாக, மேளதாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டது. இந்த விழாவில் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், இணை ஆணையா் குமரதுரை, செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com