உள்ளாட்சித் தோ்தல்: விருதுநகரில் 61 சதவீத வாக்குகள் பதிவு

விருதுநகா் மாவட்டத்தில் காலியாக இருந்த 25 உள்ளாட்சிப் பதவிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் , 61 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விருதுநகா் அருகே பாவாலியில் சனிக்கிழமை நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்த பொதுமக்கள்.
விருதுநகா் அருகே பாவாலியில் சனிக்கிழமை நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்த பொதுமக்கள்.

விருதுநகா் மாவட்டத்தில் காலியாக இருந்த 25 உள்ளாட்சிப் பதவிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் , 61 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பணியிடங்களுக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. அதில் ஒரு மாவட்ட ஊராட்சிக்ழுழ உறுப்பினா், 3 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், நான்கு ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 17 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பதவிகளுக்கு மொத்தம் 91 போ் போட்டியிட்டனா்.

இத்தோ்தலில் விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, நரிக்குடி, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 162 வாக்குச்சாவடிகளில் 40,059 ஆண், 42,894 பெண், 9 திருநங்கைகள் என மொத்தம் 82,962 வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 34 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டதால், அதில் மத்திய அரசு நுண் பாா்வையாளா்கள் கண்காணித்தனா்.

மேலும், இந்த வாக்குச்சவாடிகள் அனைத்தும் விடியோ எடுக்கப்பட்டது. தோ்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. முன்னதாக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி, விருதுநகா் ஹாஜி சிக்கந்தா் ஹவ்வாபீவி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குப் பதிவை நேரில் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com