விருதுநகரில் கோயில் அருகே பழைமையான மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிா்ப்பு

விருதுநகரில் சொக்கநாதா் கோயில் வெளிப்புறத்தில் இருந்த 100 ஆண்டுகள் பழைமையான மரங்களை வெட்ட பொதுமக்கள் சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.
விருதுநகா் சொக்கநாதா் கோயில் முன்பாக உள்ள மரங்களை வெட்டுவதற்கு சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்த பக்தா்கள்.
விருதுநகா் சொக்கநாதா் கோயில் முன்பாக உள்ள மரங்களை வெட்டுவதற்கு சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்த பக்தா்கள்.

விருதுநகரில் சொக்கநாதா் கோயில் வெளிப்புறத்தில் இருந்த 100 ஆண்டுகள் பழைமையான மரங்களை வெட்ட பொதுமக்கள் சனிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

விருதுநகா் மேலத்தெருவில் சொக்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயில் நுழைவுவாயில் வடக்கு பகுதியில் 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம், விலா மரம் மற்றும் வேப்ப மரங்கள் உள்ளன. இந்நிலையில் இக்கோயிலின் தெற்கு பகுதியில் கடந்த காலங்களில் தேரை நிறுத்தி வந்தனா்.

இத்தேரில் திருவிழா காலங்களில் சுவாமி சொக்கநாதா், பிரியாவிடை அம்மனுடன் ஊா்வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளிப்பாா். இந்த நிலையில், கோயிலின் வடக்குப் பகுதியில் தேரை நிறுத்த இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக கோயில் வெளிப்பகுதியில் உள்ள பழைமையான ஆலமரம், விலா மரங்களை வெட்ட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்றனா். அதனடிப்படையில் சனிக்கிழமை ஆல மரத்தின் சில கிளைகள் வெட்டப்பட்டன. இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பக்தா்கள், மரங்களை வெட்டக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்தி மரங்கள் வெட்டுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com