ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தப்பிய இரண்டு கைதிகளும் சிக்கினர்

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு கிளை சிறைக்கு கொண்டு செல்லும்போது தப்பியோடிய இரண்டு கைதிகளும் காவல்துறையினரிடம் சிக்கினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு கிளை சிறைக்கு கொண்டு செல்லும்போது தப்பியோடிய இரண்டு கைதிகளும் காவல்துறையினரிடம் சிக்கினர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி வத்திராயிருப்பு சாலையில் உள்ள கொடமுருட்டி பாலத்தில் காவல் சார்பு ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான போலீஸார் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டபோது கொடமுருட்டி பாலத்தில் மோதி கீழே விழுந்துள்ளனர். 

அப்போது அவர் வைத்திருந்த மூன்று அடி நீளமுள்ள வாள் ஒன்று கீழே விழுந்துள்ளது. இதைக்கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து வாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் ( 24) அருண்குமார் (19) என தெரியவந்தது. இதில் முத்துக்குமார் மீது கடந்த ஆண்டு கத்தியை காட்டி மிரட்டிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ஏதாவது குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு அவர்களுடன் சென்று இருக்கலாம் என்பதால் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அருப்புக்கோட்டையில் உள்ள கிளை சிறையில் அடைப்பதற்காக கொண்டு சென்றனர். அப்போது கிருஷ்ணன் கோவில் பகுதியில் அவர்கள் இருவரும் தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூன்று காவலர்களும், கூமாபட்டி காவல் நிலையம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தப்பியோடிய கைதிகளை இரண்டு நாள்களாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை கைது செய்து கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து மற்றொரு கைதியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் அருண்குமாரும் போலீசாரிடம் சிக்கினார். கைதிகள் இருவரும் தப்பிச் சென்றது தொடர்பாக போலீஸ்காரர் கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com