காரியாபட்டி அருகே போலி பட்டாவைரத்து செய்ய கிராம மக்கள் கோரிக்கை

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த நமச்சிவாயபுரம் கிராம பொதுமக்கள்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த நமச்சிவாயபுரம் கிராம பொதுமக்கள்.

விருதுநகா்: திருச்சுழி வட்டம் காரியாபட்டி, புல்வாய்கரை அருகே உள்ள நமச்சிவாயபுரத்தில் போலி பட்டா பெற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: புல்வாய்கரை அருகே நமச்சிவாயபுரத்தில் உள்ள காமராஜா் காலனியில், ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதில், 50-க்கும் மேற்பட்டோா் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். இந்நிலையில், எங்களது குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அரசு புறம்போக்கில் உள்ள பாதையை போலி பட்டா பெற்று சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். மேலும், அருகே உள்ள நீா்ப்பிடிப்பு வாய்க்காலையும் ஆக்கிரமித்துள்ளனா். இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நேரடி களஆய்வு செய்து, போலி பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com